சென்னையை அடுத்த திருவொற்றியூர் சாத்துமா நகரில் 45 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஐயப்பன் திருவிளக்கு பூஜை தற்போது 46 ஆவது ஆண்டு விளக்கு பூஜை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் அருள்தரும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்ப சாமிக்கு இன்று காலை கணபதி பூஜையுடன் விளக்கு* *பூஜைதொடங்கியது*.*சாத்துமாநகர் ஸ்ரீ ஐயப்ப பக்தஜன சபாவின் ஆன்மீக சமூக சேவை சங்கத்தின் தலைவர்* *கி.மணிவாசகம் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட* *வாழை மர பட்டைகளால் கட்டப்பட்ட* *அம்பலத்தில் குருசாமி* *எம் பி* *ராமச்சந்திரன் கணபதி* *பூஜையை நடத்தி வைத்தார். அதன்பின்பு அம்மன் மற்றும் வெங்கடேச பெருமாள்* *அருள்மிகு ஐயப்ப சாமிக்கு மலர் பூஜை* *நடைபெற்றது**அந்த பூஜைக்குப் பின்பு 500 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது*
Chennai
சூறாவளி புயலிலிருந்து மாண்டஸ் புயலாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும். இது புயலாகவே சென்னையின் தெற்கு பகுதியில் இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்குள் கரையை கடக்கும்.
Details
தமிழக மக்களை வாட்டி வதைக்கும் *சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு* மற்றும் அனைத்து விலைவாசி உயர்வுக்கும் காரணமான திமுக அரசை எதிர்த்து திருவொற்றியூர் கிழக்கு மண்டல சார்பில், திருவொற்றியூர் தேரடியில்,மண்டல தலைவர் *திரு.S.K.T.ரவி* அவர்களது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவொற்றியூர் கிழக்கு மண்டலைச் சார்ந்த அனைத்து மாநில, மாவட்ட, மண்டல், வட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து திரளாக பலர் கலந்து கொண்டனர்.Reported by : A.Balamurugan
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் அடுத்த புதிய எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் 2000 வருடம் பழமை வாய்ந்த அதிசய சிவன் கோவிலில் சனி பிரதோஷம் சிறப்பு பூஜைகளும் ஆராதனையும் நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர்.மேலும் 22/10/22 அன்று சனி பிரதோஷம் முன்னிட்டு நம்முடைய கோவிலுக்கு பி.ஜே.பி மாநில செயலாளர் திரு.எஸ்.ஜே.சூர்யா அவர்கள் மற்றும் திருவொற்றியூர் பி.ஜே.பி மாவட்ட செயலாளர் திரு.ஜெய்கணேஷ் அவர்களும் ,திருவொற்றியூர் மேற்கு மண்டல செயலாளர் திரு.கிரி அவர்களும் மற்றும் பி.ஜே.பி யின் நிர்வாகிகளும் மற்றும் எருமை வெட்டி பாளையம் கிராம தலைவர் திரு வெங்கட்ராமன் ,ஜோதி கார்த்திக் , கணேஷ் ,இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்த திரு.தீபன் அனைவரும் கலந்து கொண்டனர்.இந்த சிவன் கோவிலில் திருக்குடமுழுக்கு இன்றும் நடைபெறவில்லை என்பது வருத்தமிக்க செய்தியாக உள்ளது.Reported by A.Balamurugan
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள 82 பனப்பாக்கம் கிராமத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ ஹரி கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர் மேலும் மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது பின்னர் மாலையில் புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா வந்து ஸ்ரீ ஹரி கிருஷ்ண பெருமாள் மக்களுக்கு தரிசனம் தந்தார்.Reported by B.Rajasekar
சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் தனியார் மண்டபத்தில் மெட்ராஸ் ஹோமிங் புறாக்கள் கிளபின் சார்பில் விழா போட்டிகள் நடைபெற்றது, இந்த புறா போட்டியில் 200 கிலோ மீட்டர் முதல் 1000 கிலோமீட்டர் வரை பந்தையும் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியிலும் வரும் முதல் பத்து புறாக்கள் புள்ளிகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அதிக புள்ளிகள் பெறும் புறாக்கள் உரிமையாளர்களுக்கு சாம்பியன் பட்டம் கொடுக்கப்படும் இதில் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து திருவொற்றியூர் வசிக்கும் ஏ ஆர் ஏஜென்சிஸ் உரிமையாளர் ஜெபரேசன் அவர்கள் புறாக்கள் தொடர்ந்து சாம்பியனாக வெற்றி பெற்று வந்துள்ளது, இது அவரை கௌரவிக்கும் வகையில் பரிசு அளிப்பு மற்றும் அவரை கௌரவித்து மகிழ்ந்து வந்தனர்,மேலும் இதில் புறா வளர்த்து சாம்பியன் பட்டத்தை வென்ற நபர் இளைஞர்களுக்கு கூறுகையில் இந்த மாதிரி புறா வளக்குறனால ஒரு ரிலாக்சேஷன் மென்டல் ஸ்டோர் இது மாதிரி எல்லாமே குறையுது இந்த மாதிரி புறா போட்டிகள் என்பது வந்து இப்ப தொடங்குதில்லை அந்த காலத்தில் இருந்த அரசர்கள் வந்து அவங்க தங்களுடைய தகவல்கள் பரிமாறுவதற்காக வச்சிருந்தாங்க உலகப் போரிலும் இந்த புறா எல்லாம் பயன்படுத்தினாங்க ஆனா இப்ப அதெல்லாம் மாறி இப்ப நம்ம சயின்ஸ் வந்து டெக்னாலஜி மாறுனதுனால இப்ப அந்த இடம் வந்து அழிஞ்சுட்டு இருக்கு இப்போது இந்த மாதிரி போட்டிகள் நடத்துறனால அந்த இனத்தை வந்து அழியாமல் அந்த ஹோமிங் புறாக்கள் 256 வகையான இருக்கு அதுல இந்த ஹோமர் புறாக்களை எல்லாம் வந்து அழியாமல் பாதுகாக்க படும் இந்த மாதிரி போட்டிகள் நடத்துறதுனால காப்பாற்றப்படுது இப்போ இளைஞர்கள் எல்லாம் மொபைல் போன் வீடியோ கேம்ஸ், இந்த மாதிரி எல்லாம் விளையாடிட்டு வீட்டுக்குள்ளே அடைஞ்சிடுறாங்க மற்றும் போதைக்கு அடிமைகளாக உள்ளனர், இளைய தலைமுறைக்கு இந்த மாதிரி அவங்க ஒரு பேர்ட்ஸ் எல்லாம் விளக்கி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அவங்களுக்கு இன்னொரு மனம் நிம்மதி குடுக்கும் ஒரு இந்த சயின்ஸ் டெக்னாலஜி இந்த மாதிரி ஒரு மைண்ட் ரிலாக்ஸ் மாதிரி வர்றதுக்கெல்லாம் இந்த போட்டிகள் எல்லாம் ரொம்ப வந்து பயன்படுது. ஆனா இதுக்கு வந்து நம் நாட்டில் விழிப்புணர்வு அதிகமா இல்ல இன்னும் இளைஞர்கள் மத்தியில இந்த மாதிரி அவரது நல்லா சிறப்பா இருக்கும் இது மேல் நாடுகளி்ல் வந்து நெதர்லாந்து, பெல்ஜியம், ஆகிய நாடுகளில் எல்லாம் வந்து ரொம்ப பிரபலமாக போட்டிகள் நடைபெற்று வருகிறது, இது எல்லாமே நம்ம நாட்டுல இன்னும் அந்த லெவலுக்கு வந்து பிரபலங்கள் அடைய வில்லை என்று கூறினர்.
இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஶ்ரீ மஹாபெரியவர் அனுக்ரஹத்துடன் உலக நன்மை வேண்டி (லோகசேஷமத்திற்கு வேண்டி) "ஸகல ஐஸ்வரங்களையும் தரும் ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்/ஶ்ரீ கட்கமாலா/ ஶ்ரீ ராஜராஸேஸ்வரி அஷ்டகம்/ ஶ்ரீ த்ரிசதீ மற்றும் தோடகாஷ்டகம் பாரயனம் நேற்று திருவொற்றியூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஶ்ரீ நாகத்தம்மன் கோவிலில் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரி ஹோமம் நடைபெற்றது.Reported by G.Krishnamoorthy
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் திரு, விஜயகாந்தின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பஜனை கோவில் தெரு சந்திப்பில் மற்றும் எர்ணாவூர் மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் தேமுதிகவின் கழக கொடி ஏற்றி அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருவொற்றியூர் மேற்குப் பகுதி 4வது வட்டத்தின் சார்பாக பொதுமக்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வட சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் எம் செந்தில்குமார் மற்றும் தேமுதிக தலைமை உயர்மட்டக்குழு உறுப்பினர் பி.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் 400க்கும் மேற்பட்ட எழை எளிய மக்களுக்கு அசைவ பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியை திருவொற்றியூர் மேற்கு பகுதி துணைச் செயலாளர் ஏ.பவுல்ராஜ் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பகுதி துணைச் செயலாளர் டி சுரேஷ்4வது வட்டக் கழகச் செயலாளர் ஆர் மணிகண்டன் ஆகியோருடன் வட்டச் செயலாளர்கள் டி ரகுமான் கோவிந்தராஜ் தினகரன் அன்பழகன் எஸ் எம் ராஜா முனுசாமி அருண் மற்றும் எ ஆறுமுகம் பி. பிரதாப் ஏ விஜய் ஸ்ரீ வெங்கடராஜ் ஆர் செல்வம் ஜே பரமகுரு எஸ் சீனிவாசன் எம் மார்ட்டின் ஜே மோகனா ஆகியோருடன் பகுதி துணைச் செயலாளர் தீபன்குமார், R.K நகர் கழக நிர்வாகிகள் ஜின்னாரவி, மற்றும் தேமுதிகவினர் பலர்கலந்து கொண்டனர். முன்னதாக திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் முருகன் கோவிலில் தேமுதிக தலைவர் திரு, விஜயகாந்தின் அவர்களின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நலமாகவும் உடல் நலம் தேறி மக்கள் பணியாற்ற வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
வருகின்ற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னை முழுவதும் சுமார் 5501 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் எண்ணூர் எர்ணாவூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிலைகள் 3 அடி முதல் 10 அடி வரை செய்யப்பட்டு வந்தது கடலூர் மாவட்டத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட சிலை செய்யும் கலைஞர்கள் இந்த முறை மிக சிறப்பாக சிலைகளை வடிவமைத்துள்ளனர் ஐந்து தலை நாகம் சர்ப வாகனத்தில் விநாயகர் வீற்றிறுப்பது போலவும் தாமரை மீது விநாயகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போலவும் சிங்கம், மயில், மான் , மாடு, வடிவிலான வாகனத்தின் மீது அமர்ந்திருப்பது போலவும் பச்சை நிற விநாயகர் கருப்பு விநாயகர் அனுமன், சித்தி, முத்தி, விநாயகர் ஆகிய விநாயகர் சிலைகள் செய்யும் பணி நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது இந்து முன்னணி சார்பில் 551 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் செய்யப்பட்டு வந்த நிலையில் அரசு அறிவித்த அறிவிப்பின்படி நீர் நிலைகளில் எளிதில் கரையக்கூடிய நீர் நிலையில் வாழும் உயிரினங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் கிழங்கு மாவு இயற்கை வண்ணம் பேப்பர் கூழ் ஆகிய பொருட்களை வைத்து விநாயகர் சிலைகளை செய்யப்பட்டு வருகின்ற 28 ஆம் தேதி எடுத்து சென்று காவல்துறை அனுமதிக்கப்பட்ட இடங்களில் வைத்து பூஜைகள் செய்து பின்னர் கடலில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தனர்கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி விநாயகர் சிலைகள் முழு அனுமதி இல்லாமல் ஒரு சில இடங்களில் வைக்கப்பட்டு வழிபட்டு வந்த நிலையில் இந்த வருடம் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்து கரைக்கப்பட்ட உள்ளதாகவும் இந்த வருடம் அதே போன்று பந்தல் அமைப்பது அனுமதி உள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து அறிவுறுத்துவது மின்சார கட்டுப்பாடு நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனை தமிழக அரசும் காவல்துறையினரும் சில தளர்வுகளை ஏற்படுத்தி விநாயகர் பக்தர்கள் மனம் புண்படாமல் வகையில் விநாயக பக்தர்கள் எந்த சிரமங்கள் இன்றி சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் கடலில் கொண்டு சென்று கரைப்பதற்கான நடவடிக்கைகளை வழிவகை செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.REPORTED BY A.BALAMURUGAN
DETAIL
19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த புதன் கிழமை யாக சால பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நாள்தோறும் முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு மேல் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு சென்றனர். மேலும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.Reported by B.Yuvaraj
Page 1 of 8 pages, Display 1-10 of 77 Next › Last »